Home One Line P1 சுங்கை பட்டாணியில் குடியிருப்பு பகுதியிலிருந்து 400மீ தொலைவில் வெடிகுண்டு கண்டெடுப்பு!

சுங்கை பட்டாணியில் குடியிருப்பு பகுதியிலிருந்து 400மீ தொலைவில் வெடிகுண்டு கண்டெடுப்பு!

598
0
SHARE
Ad

சுங்கை பட்டாணி: இங்குள்ள மெட்ரோஸ்ரீ வாங் சாலையில் உள்ள கட்டுமான இடத்தில் நேற்று  வியாழக்கிழமை 81மிமீ வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கோலா முடா காவல் துறைத் துணைத் தலைவர் ஷாம்சுடின் மாமாட் தெரிவித்தார்.

அவ்வெடிகுண்டு மண் மற்றும் மண்ணால் சூழப்பட்டிருந்ததாகவும், துருப்பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

திறந்தவெளியில் துப்புரவு நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவரால் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கோலா முடா காவல் தலைமையகத்தின் வெடிகுண்டு  மீட்பு பிரிவின் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. விசாரணையில் வெடிகுண்டு 59 செ.மீ நீளமும் 35 செ.மீ அகலமும் கொண்ட குண்டு இன்னும் செயலில் உள்ளது என்று கண்டறியப்பட்டதுஎன்று அவர் இன்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அக்குண்டு  குடியிருப்புப் பகுதியிலிருந்து 400 மீட்டர் தொலைவில் இருந்துள்ளதாகவும், இது பொது மையமாக இல்லை என்றும் அவர் கூறினார்.

வெடிகுண்டு வெளியேற்றப்பட்டது. அவை வெடிகுண்டு அழிக்கும் பிரிவினால் இன்று ஒரு பாதுகாப்பான இடத்தில் அழிக்கப்படும்என்று அவர் கூறினார்.