Home One Line P2 பிலிப்பைன்ஸ்: பான்போன் சூறாவளியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸ்: பான்போன் சூறாவளியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்வு!

823
0
SHARE
Ad

மணிலா: பான்போன் சூறாவளியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பிலிப்பைன்ஸில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

பிலிப்பைன்ஸ் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் குழு (என்டிஆர்ஆர்எம்சி) இலாயோலோவில் ஒன்பது பேரும், கேபிஸில் நான்கு பேரும், தெற்கு லெய்ட்டில் ஒருவரும், லெய்டேயில் இரண்டு பேரும் கொல்லப்பட்டதாகக் கூறியது.

#TamilSchoolmychoice

பிலிரான், கிழக்கு சமர் மற்றும் மத்திய பிலிப்பைன்ஸின் சமர் ஆகிய இடங்களிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன.

குறைந்தது 10 பேரைக் காணவில்லை என்று என்டிஆர்ஆர்எம்சி கூறியுள்ளது.

கிழக்கு சமர் பிராந்தியத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பான்போன் சூறாவளி நிலச்சரிவை ஏற்படுத்தியது மற்றும் மத்திய பிலிப்பைன்ஸ் மற்றும் லூசோன் தீவின் தெற்குப் பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது. பல பகுதிகளிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிலிப்பைன்ஸ் மற்றும் வடக்கு மிண்டானாவோவில் 584 கிராமங்களில் கிட்டத்தட்ட 186,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரழிவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூறாவளியால் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 55 பள்ளிகள் சேதமடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளி வரை சுமார் 150 உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.