Home Featured தமிழ் நாடு ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்பாரா மோடி?

ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்பாரா மோடி?

714
0
SHARE
Ad

stalin-mk-dmkசென்னை – இலங்கையில் நடைபெறவிருக்கும் அனைத்துலக புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை செல்லவிருக்கிறார்.

இந்நிலையில், இலங்கை செல்லும் மோடி, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் கௌதம புத்தரின் பிறந்தநாளை ‘விசாக்’ புனித நாளாக புத்த மதத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் இந்த ஆண்டு, கௌதம புத்தரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, வரும் மே 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐநா, இலங்கையில் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது.

இந்நிலையில், அவ்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, இலங்கை செல்கிறார். அம்மாநாட்டில், உலகின் பல நாடுகளிலிருந்தும் முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.