Home Featured இந்தியா டெல்லி பள்ளியில் வாயுக் கசிவு: 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மயக்கம்!

டெல்லி பள்ளியில் வாயுக் கசிவு: 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மயக்கம்!

1137
0
SHARE
Ad

delhischoolgasleakபுதுடெல்லி – இன்று சனிக்கிழமை காலை தெற்கு டெல்லியில் உள்ள பள்ளி அருகே வாயு நிரப்பப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று கசிந்ததில், கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

துலாகாபாத் என்ற இடத்தில் உள்ள ராணி ஜான்சி சர்வோதயா கன்ய வித்யாலயா என்ற பள்ளியில் தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நிலையில், பள்ளியில் இருந்த மற்ற குழந்தைகள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.