Home Featured நாடு ஸ்ரீமுருகன் நிலையத்தின் 35-வது நிறைவு விழா: சாஹிட் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது!

ஸ்ரீமுருகன் நிலையத்தின் 35-வது நிறைவு விழா: சாஹிட் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது!

958
0
SHARE
Ad

Zahidsmcevent1கோலாலம்பூர் – ஸ்ரீமுருகன் நிலையத்தின் 35-வது நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தலைமையில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தன்னார்வ உறுப்பினர்கள், சமுதாயத் தலைவர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 1982-ம் ஆண்டு கல்வி சார்ந்த அரசாங்க சார்பற்ற இயக்கமாகத் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீமுருகன் நிலையம் கடந்த 35 ஆண்டுகளாக மலேசிய இந்திய சமுதாயத்தில் மாபெரும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான பட்டதாரிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கியிருக்கிறது.

கடந்த 1982-ம் ஆண்டு, செப்டம்பர் 24-ம் தேதி, டான்ஸ்ரீ டாக்டர் எம்.தம்பிராஜா, 42 பட்டதாரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் இணைந்து ஸ்ரீமுருகன் நிலையத்தைத் தோற்றுவித்தார்.

#TamilSchoolmychoice

“அனைவரும் சமம்; அனைவருக்கும் சமமான அறிவாற்றல்; கல்வியில் வெற்றியடைய சமயமே அடித்தளம்” என்ற மூன்று கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த இயக்கம் செயல்பட்டு வருவதாக டாக்டர் தம்பிராஜா தமதுரையில் தெரிவித்தார்.

Zahidமேலும், “பல்வேறு தரப்பினரின் வற்றாத ஆதரவினால், ஸ்ரீமுருகன் நிலையம் நமது மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும், வாழ்வில் வெற்றியடைவதற்கான தூண்டுதலையும் சிறப்பாக வழங்கி வருகின்றது. ஸ்ரீமுருகன் நிலையத்தின் 35-வது நிறைவு விழாவிற்கு காரணமாக இருக்கும் அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, இளைஞர்கள் தொடர்ந்து இந்த இயக்கத்தை வழி நடத்தும் துவக்கமாக இந்நிகழ்வு அமைகின்றது” என்று டாக்டர் தம்பிராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்விழாவில் பேசிய சாஹிட் ஹமீடி, டாக்டர் தம்பிராஜா தனது பேராசிரியரும், குருவும் ஆவார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தம்பிராஜா போன்ற பேராசிரியர்கள் தான் இந்நாட்டில் பல சாதனையாளர்களை உருவாக்கின்றனர் என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.

Zahidsmceventமேலும், கல்வியில் எந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணித்தார் மட்டுமே அது தேசிய உருமாற்றம் 50 (TN50) அது மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கும் என்றும் சாஹிட் தெரிவித்தார்.

வளர்ந்த நாடுகள் அனைத்திலும், கல்வி முறைகளில் எந்த ஒரு பாகுபாடும் இருந்தது இல்லை என்பதையும் சாஹிட் சுட்டிக்காட்டினார்.

படங்கள் – சாஹிட் ஹமீடி பேஸ்புக்