பாரிஸ் – கடுமையான போட்டிக்கிடையில் பிரான்ஸ் நாட்டின் அடுத்த அதிபராக 39 வயதே ஆன இமானுவல் மெக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இதுவரை பிரான்ஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலேயே இவர்தான் இளமையானவர்.
வெற்றிக் களிப்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவல் மெக்ரோன்
பிரான்ஸ் நாட்டை ஐரோப்பிய மண்டலத்தில் ஒரு முன்னணி பொருளாதார வல்லரசாக உருவாக்குவேன் என அவர் தனது பிரச்சாரங்களில் வெளிபடுத்திய முழக்கங்கள் மீது நம்பிக்கை வைத்து, பிரான்ஸ் மக்கள் இளமையும் துடிப்பும் மிகுந்த அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மெக்ரோனை எதிர்த்துப் போட்டியிட்ட மெரின் லெ பென் என்ற பெண்மணி தோல்வியைத் தழுவியிருப்பதன் மூலம், அடுத்த பிரான்ஸ் அதிபராக ஜெர்மனியைப் போன்று ஒரு பெண்மணி தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் பொய்த்து விட்டன.