சுங்கைப்பட்டாணி – நாட்டின் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 530-ஐ நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் கால கட்டத்தில், கெடா மாநிலத்தின் சுங்கைப்பட்டாணி நகரில் தாமான் கிளாடியில் இன்று திங்கட்கிழமை 528-வது தமிழ்ப் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகின்றது.
18 வகுப்பறைகளையும், மேலும் சில வசதிகளையும் கொண்ட இந்தத் தமிழ்ப் பள்ளி 18 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது.
இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து சிறப்பிப்பார்.
கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் தாமான் கிளாடி தமிழ்ப் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வார்.