Home Featured நாடு ‘இந்தியப் பெண்களின் தலைமுடி மழிக்கும் காணொளி மலேசியாவில் நடந்தது அல்ல’ – காவல்துறை உறுதி!

‘இந்தியப் பெண்களின் தலைமுடி மழிக்கும் காணொளி மலேசியாவில் நடந்தது அல்ல’ – காவல்துறை உறுதி!

747
0
SHARE
Ad

Viralvideoகோலாலம்பூர் – கடையொன்றில் திருடியதற்காக இந்தியப் பெண்கள் இருவரை அக்கடைக்காரர்கள் தலைமுடியை மழிக்கும் காணொளி ஒன்று வாட்சாப்பில் பரவி வருகின்றது.

அக்காணொளியை பரப்பும் சில தரப்பினர், அச்சம்பவம் மலேசியாவில் நடந்ததாகக் கூறி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், இனவாதப் பிரச்சினைகளையும் தூண்டி வருகின்றனர்.

இந்நிலையில், பரபரப்பான அக்காணொளி குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் தகவலில், அச்சம்பவம் மலேசியாவில் நடந்தது கிடையாது என்று தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இது குறித்து காவல்துறையின் பெருநிறுவனத் தகவல் தொடர்புத் தலைவர் டத்தின் அஸ்மாவதி அகமட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அக்காணொளியில் பதிவாகியிருக்கும் சம்பவம் வெனிசுலாவிலுள்ள மாராகாய்போவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது”என்று தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கும் அது போன்ற பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஸ்மாவதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.