Home Featured தமிழ் நாடு சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி!

சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி!

961
0
SHARE
Ad

chennaifireaccidentசென்னை – வடபழனியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் மோசமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தரைத்தளத்தில் இருந்த மின்சந்திப்புப் பெட்டியில் ஏற்பட்ட தீ, வாகன நிறுத்துமிடத்தில் பரவி 10 வாகனங்களை தீக்கிரையாக்கியது. அதன் புகை, அந்த 4 மாடி கட்டிடத்தின் முதல் இரண்டு தளம் முழுவதும் பரவி, அதிகாலையில் உறக்கத்தில் இருந்தவர்களை மூச்சுத்திணற வைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இவ்விபத்தில் முதல் தளத்தில் வீட்டில் உறக்கத்தில் இருந்த மீனாட்சி (வயது 65), செல்வி (வயது 30), சஞ்சய் (வயது 3), சந்தியா (வயது 10) ஆகியோர் அடர்த்தியான புகையைச் சுவாசித்து மூச்சுத்திணறி உயிரிழந்தனர் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.