Home Featured கலையுலகம் 1லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் ‘அச்சம் தவிர்’ முன்னோட்டம்!

1லட்சம் பார்வையாளர்களை நெருங்கும் ‘அச்சம் தவிர்’ முன்னோட்டம்!

1190
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சிங்கப்பூர், மலேசியா என இருநாட்டு இயக்குநர்களின் கைவண்ணத்தில் திகிலும், சுவாரசியமும் நிறைந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமான, ‘அச்சம் தவிர்’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, கோலாலம்பூர் மிட்வேலி எக்சிபிசன் செண்டரில், அஜண்டா சூர்யா கம்யூனிகேஷன் மற்றும் இந்தியன் வெடிங் ஃபேர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், அதன் முதல் முன்னோட்டக் காட்சி (Official Teaser), கார்த்திக் ஷாமலனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு திரைப்படமான ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ முன்னோட்டக் காட்சி ஆகியவை வெளியிடப்பட்டன.

முதல் முறையாக இந்தியத் திரைப்படங்களுக்கு நிகராக இயக்கத்திலும், ஒளிப்பதிவிலும், நடிப்பிலும் முன்னேறியிருக்கும் மலேசியக் கலைஞர்களின் உழைப்பைக் கண்டு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்தனர்.

#TamilSchoolmychoice

“உண்மையா சூப்பரா இருக்குப்பா.. மலேசியப் படமான்னு நம்பவே முடியல” என்று கூட்டத்தில் பொதுமக்கள் ஆங்காங்கே ஆச்சரியப்பட்டுப் பேசுவதைக் கேட்க முடிந்தது.

டிஎச்ஆர் வானொலியைச் சேர்ந்த உதயா, ஆனந்தா, கீதா, ரேவதி ஆகியோரோடு, நடிகர் கானா, விகடகவி மகேன், பாடகர் ரேபிட் மேக், ஆல்வின் மார்டின் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சிங்கப்பூர் இயக்குநர் எஸ்.எஸ்.விக்னேஸ்வரன் சுப்ரமணியம், மலேசிய இயக்குநர் கார்த்திக் ‌ஷாமலனும் இணைந்து இயக்கியிருக்கின்றனர். இர்வின் முனிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வர்மன் இளங்கோவன் இசையமைத்திருக்கிறார்.

‘அச்சம் தவிர்’ முன்னோட்டத்தினை கீழ்காணும் பேஸ்புக் இணைப்பில் சென்று காணலாம்:-