Home One Line P2 ஆஸ்ட்ரோ: புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர் ‘கல்யாணம் 2 காதல்’

ஆஸ்ட்ரோ: புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர் ‘கல்யாணம் 2 காதல்’

613
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 1, இரவு 9 மணி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி அலைவரிசையிலும் (அலைவரிசை 231) ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் வழியாகவும் முதல் ஒளிப்பரப்பாகவிருக்கும் “கல்யாணம் 2 காதல்”, புத்தம் புதிய உள்ளூர் தமிழ் காதல் தொடரைக் கண்டு களிக்கலாம்.

புகழ்பெற்ற உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்/இயக்குநர் கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில் மலர்ந்த ‘கல்யாணம் 2 காதல்’ ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிபரப்பாக (பிரீமியர்) ஒளியேறும் முதல் உள்ளூர் காதல் தொடராகும். 22 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரில் மகேந்திரன் ராமன், மலர்மேனி பெருமாள், யுவராஜ் கிருஷ்ணசாமி, பாஷினி சிவகுமார், ரவின் ராவ் சந்திரன், திருவள்ளுவன், ரமிதாஸ்ரி, டிஷாலனி ஜாக் மற்றும் விஜய் நாயுடு உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

தங்களது வாழ்க்கையில் பாக்கியநாதன் (மகேந்திரன் ராமன்), மியாவின் (மலர்மேனி பெருமாள்) வருகைக்குப் பிறகு பல இடர்களை சந்திக்கக்கூடும் என்பதை அறியாமல் காதல் வயப்படும் ஹரிஷ் (மகேந்திரன் ராமன்), சௌமியாவைப் (மலர்மேனி பெருமாள்) பற்றியக் கதையைச் சித்தரிக்கின்றது கல்யாணம் 2 காதல் தொடர் .

#TamilSchoolmychoice

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் மாதம் முழுவதும் “கல்யாணம் 2 காதல்” தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாகக் கண்டு களிக்கலாம் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.