Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

653
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று இரவு 8.00 மணியளவில் வானொலி, தொலைக்காட்சி வழி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நடப்பிலிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு நிறைவடைய இருந்தது. கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் இந்த ஆணை அமுலுக்கு வந்தது.

உலகம் முழுவதும் இதுவரையில் 22 மில்லியன் பேர் கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 780,000 பேர் மரணமடைந்துள்ளனர் என்பதையும் மொகிதின் இன்று தனதுரையில் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“கொவிட்-19 தொற்று இன்னும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டுள்ளோம். மேலும் சிவகங்கா போன்ற புதிய தொற்றுத் திரள்கள் தொடர்ந்து பரவாமல் இருப்பதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த காரணங்களால் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையில் மீட்சிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது” என்றும் மொகிதின் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும் என்பதால் 1988-ஆம் ஆண்டின் தொற்று நோய் தடுப்பு, கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் தொடர்ந்து அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பதையும் மொகிதின் யாசின் தனது உரையிர் தெரிவித்தார்.

மீட்சிக் காலம் தொடர்ந்து கொண்டிருப்பதால் கொவிட்-19 தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் நிதிக்காக தொடர்ந்து நன்கொடைகள் பெறப்படும் எனவும் மொகிதின் கூறினார்.