Home One Line P2 “கல்யாணம் 2 காதல்” – இயக்குநர் கார்த்திக் ஷாமலன் – நடிகர்களின் அனுபவங்கள்

“கல்யாணம் 2 காதல்” – இயக்குநர் கார்த்திக் ஷாமலன் – நடிகர்களின் அனுபவங்கள்

840
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மையில் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் உள்ளூர் தொலைக்காட்சித் திரைப்படத் தொடராக ஒளியேறியது “கல்யாணம் 2 காதல்”.

வித்தியாசமான திரைக்கதை அமைப்பு, தொழில்நுட்ப அம்சங்களின் உள்ளீடு, அறிவியல் வளர்ச்சி ஓர் உச்சத்தை அடையும்போது, அது என்ன மாதிரியான  தாக்கங்களை மனித வாழ்க்கையில் ஏற்படுத்தக் கூடும் போன்றவற்றை சுவாரசியமான சம்பவங்களைக் கொண்டு விவரித்தது இந்தத் தொடர்.

இரசிகர்களின் பரவலான பாராட்டுகளையும் பெற்றது “கல்யாணம் 2 காதல்” தொடர். இந்தத் தொடரை இயக்கியவர் பிரபல உள்ளூர் இயக்குநரான கார்த்திக் ஷாமலன்.

#TamilSchoolmychoice

இந்தத் தொடர் விண்மீன் அலைவரிசையில் ஒளியேறி நிறைவு பெற்றாலும், ஆஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் வழியாக எப்போது வேண்டுமானாலும் ஆஸ்ட்ரோ நேயர்கள் பதிவிறக்கம் செய்து பார்த்து மகிழலாம்.

இந்தத் தொடர் குறித்த தனது கருத்துகளையும், அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கார்த்திக் ஷாமலன்.

கார்த்திக் ஷாமலன்

• இத்தொடரைப் பற்றியும், அதன் பின்னணியில் உள்ள உத்வேகத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்?

மகிழ்ச்சியைத் தரும் சரியான வாழ்க்கையை பெரும் நோக்கில் தங்களது கடந்தக் கால தவறுகளை சரி செய்ய 2050-ஆம் ஆண்டிலிருந்து நியூரான்கள் பயண முறை (Neurons Travel method) மூலம் தங்களது கடந்தக் காலத்திற்கு பயணிக்கும் ஒரு மனமுடைந்த தம்பதியினரைப் பற்றியத் தொடராகும்.

சௌமியா தனது இளைய சுயம் ஹரிஷின் பால் காதல்வயப்படாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறார். மறுபுறம் ஹரிஷ் தனது இளைய சுயம் சௌமியாவுடன் இணைந்து சிறந்த வாழ்க்கையை வாழ முன்பு செய்த தவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார். இது சூழலை மேலும் கடினமாக்குகிறது.

எதிர்காலத்தில் இருந்து சௌமியா தனது இளைய சுயத்தை ஹரிஷைக் காதலிப்பதிலிருந்து வெற்றிகரமாக நிறுத்தியப் பின்னர் கதை ஒரு பெரியத் திருப்பத்தை ஏற்ப்படுத்துகிறது. அடுத்து நடக்கும் சம்பவங்கள் உணர்ச்சிவசப்பட்ட ரோலர் கோஸ்டர் சவாரிகளாக கூறப்படுகிறது!

• ஆஸ்ட்ரோ ஆன் டிமாண்ட வழியாக எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) மூலம் கிடைக்கிறது உங்களின் முந்தைய படைப்புகள். அமானுஷ்ய கூறுகளைக் கொண்ட ‘தி ஃபார்ம்: என் வீட்டு தோட்டத்தில்’ மற்றும் ஆஸ்ட்ரோவில் உங்களின் முதல் அமானுஷ்ய தொடரான ‘கள்வனை கண்டுபிடி’ போன்ற திரைப்படங்கள்/தொடர்களை இயக்கியுள்ளீர்கள். முந்தைய படைப்புகளை இயக்குவதற்கும் ஒரு காதல் தொடரை இயக்குவதற்கும் இடையிலான மாற்றங்களையும் அதன் மூலமான தங்களின் அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்? சில பெரிய வேறுபாடுகளைப் பகிரவும்.

நான் ரொமான்ஸையும் இன்னும் சில வகைகளையும் நேசிப்பதைப் போலவே த்ரில்லர்களையும் விரும்புகிறேன். ‘தி ஃபார்ம்’ போன்ற திரைப்படத்தை இயக்கும் போது, உரையாடல் இல்லாமல் ஒரு கதையை எப்படிச் சொல்வது என்பதைப் புரிந்துக்கொள்ள எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது.

‘கள்வனை கண்டுபிடி’ போன்ற தொடரை இயக்கும் போது, ஒரு கதையைச் சொல்ல அதிகமான உரையாடல்களும் செயல்களும் தேவைப்பட்டன. ஆனால் இரண்டும் சில காதல் மற்றும் மனித உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட காட்சிகளைக் கொண்டிருந்தன.

‘கல்யாணம் 2 காதல்’ என்பது மனித உணர்ச்சிகள் மற்றும் நடத்தை வாசிப்புகளை மையமாகக் கொண்டது. அறிவியல் புனைகதை பகுதியும் தந்திரமான நேரியல் அல்லாத ஸ்கிரிப்டும் தான் ‘கல்யாணம் 2 காதல்’ தொடரின் முழு செயல்முறையை சுவாரசியமாகவும் செயல்படுத்த மிகவும் கடினமாகவும் ஆக்கியது.

உதாரணமாக, முதல் அத்தியாயத்தின் உரையாடல்கள் பதினேழாம் அத்தியாயத்துடன் இணைக்கப்படும்; மற்றும் ஆறாம் அத்தியாயத்தின் உரையாடல்கள் இருபத்து இரண்டாம் அத்தியாயத்துடன் இணைக்கப்படும். சரியான உணர்ச்சிகள் பார்வையாளர்களை அடைவதை உறுதி செய்ய இந்த இணைப்புகளுக்கு அதிக கவனம் மற்றும் திட்டமிடல் தேவைப்பட்டன. என்னிலுள்ள எழுத்தாளருக்கு இப்பகுதி மிகவும் சவாலாக இருந்ததோடு உற்சாகத்தையும் தந்தது.

• உள்ளூர் திறமைகளுக்கும் உள்ளூர் இந்தியத் திரைப்படத் துறையினருக்கும் ஆஸ்ட்ரோ வழங்கும் வாய்ப்புகள் குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்?

ஆஸ்ட்ரோ விண்மீன் இளம், உள்ளூர் திறமைகளுக்கு பெரிதும் ஆதரவளிக்கிறது. பார்வையாளர்களிடமிருந்து சரியான அங்கீகாரத்தைப் பெற்ற அவர்களின் ஆதரவில் வளர்ந்தவர்களில் நானும் ஒருவன் என்று பெருமையுடன் கூறுகிறேன்.

‘கல்யாணம் 2 காதல்’ போன்ற ஒரு திரைக்கதையை (ஸ்கிரிப்டை) ஒப்புக்கொள்வது நிச்சயமாகக் குறிப்பிடத்தக்கது. இளம், துடிப்புமிக்க அணிகளிடமிருந்து சிறந்த ஸ்கிரிப்ட்களை ஆஸ்ட்ரோ கவனமாக தேர்வு செய்து வருகிறது. இது பல திறமைகளைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு சிறந்த தளத்தை உருவாக்க துணைபுரிகிறது. நன்றி, ஆஸ்ட்ரோ!

நடிகர்கள்: மகேந்திரன் ராமன், மலர்மேனி பெருமாள், யுவராஜ் கிருஷ்ணசாமி & பாஷினி சிவகுமார் ஆகியோரின் அனுபவங்கள்

• ‘கல்யாணம் 2 காதல்’ உங்களின் கதாபாத்திரங்களைப் பற்றி கூறுங்கள்?

o மகேந்திரன் ராமன்:

மகேந்திரன் ராமன்

‘கல்யாணம் 2 காதல்’ தொடரில் எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘பாக்கியநாதன்’, தனது கடந்த கால தவறுகளை சரி செய்து எதிர்காலத்தில் தனது அன்புக்குரியவர்களுடன் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் எனும் நோக்கில் 2050-இல் இருந்து 2020-க்கு பயணிக்கும் ஓர் அவதாரம்.

o மலர்மேனி பெருமாள்:

மலர்மேனி பெருமாள்

தோல்வியுற்ற திருமணத்தால் அவதிப்பட்ட மனம் உடைந்த நபரான ‘மியா’ என்ற கதாபாத்திரம். மகிழ்ச்சியைக் காண அவள் விதியை மாற்ற விரும்புகிறாள். ஆடை, ஆபரணங்கள் அல்லது நெற்றியில் வைக்கும் பொட்டு உட்பட தனது தோற்றத்தில் எப்போதும் ஒரு சிவப்பு வர்ணத்தை சுமக்கும் ஒருவள்.

மியா தனது வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறாள். தனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வேறு எதற்கும் முன் தன் சுய முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்கிறாள். அவள் தைரியமாகவும், தன் இலக்குகளை அடைய உறுதியாகவும் இருக்கிறாள். ரோலர் கோஸ்டர் உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு பாத்திரம்.

o யுவராஜ் கிருஷ்ணசாமி:

யுவராஜ் கிருஷ்ணசாமி

‘கல்யாணம் 2 காதல்’ தொடரில் நான் ‘ஹரிஷாக’ வலம் வந்தேன். இக்கதாபாத்திரம் எனக்கு கிடைத்த ஓர் ஆசீர்வாதம் என கருதுகிறேன். ஏனென்றால், இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இது தலைசிறந்த ஒன்றாக கருதுகிறேன்.

இப்பாத்திரம் மிகவும் விசித்திரமானது. இருப்பினும், அவரைப் பற்றிய நிமிட விவரங்களுடன் என்னால் தொடர்புபடுத்த முடியும். சௌமியாவுடன் ஹரிஷின் கதாபாத்திரமும் கதையின் முக்கியமான பகுதியாகும். அது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுத்தது.

அதிர்ஷ்டவசமாக, நான் கார்த்திக் ஷமாலன், அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்திருந்ததால் என்னுள் சிறந்ததை என்னால் வெளிக்கொணர முடிந்தது. சுருக்கமாக, ஹரிஷாக இருந்ததற்கும், தொடரால் பெறப்பட்ட நேர்மறையான வரவேற்புக்கும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

o பாஷினி சிவகுமார்:

பாஷினி சிவகுமார்

எனது பாத்திரத்தின் பெயர் சௌமியா. அவள் ஒரு உள்முக சிந்தனையாளர். எனது உண்மையான ஆளுமை போலல்லாமல் முற்றிலும் மாறுபட்ட பாத்திரம். எனவே, இக்கதாபாத்திரத்திற்கான எனது உள்ளுணர்வையும் உடல் வசனங்களையும் குறைக்க மிகவும் சவாலாக இருந்தது.

துயரமான கடந்த காலத்தின் காரணமாக சௌமியாவினுள் ஒரு தடுமாற்றம் உள்ளது. அவள் உறுதியற்ற குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அப்பா ஒரு வன்முறையாளர். அதனால், அவளும் பாதிக்கப்பட்டாள்.

இது ஆண்கள் மீதான அவளது பார்வையை மாற்றிவிட்டது. அவள் ஒரு முன்கூட்டிய கருத்தோடு வாழ்கிறாள். இது பின்னர் பல சிக்கல்களை உருவாக்குகிறது.

• இத்தொடரில் பணியாற்றிய போது உங்களின் மறக்கமுடியாத தருணங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

o மகேந்திரன் ராமன்:

மறக்கமுடியாத தருணம், நான் ஹரிஷிடம் கூச்சலிட்டு அறைக்குள் சென்ற பின், அவர் வந்து என்னைச் சந்திக்கும் காட்சி. முழுக் காட்சியையும் நான் மிகவும் விரும்புகிறேன்.

குறிப்பாக “நீ சிரிச்சா நான் சிரிச்சா மாரி” என்ற உரையாடல் கொண்ட காட்சி. ஏனெனில், அவரது வலி மற்றும் சௌமியாவை திரும்பப் பெறுவதற்கான அவரது போராட்டங்கள் என பக்கியநாதனுக்காக நான் உணரத் தொடங்கும் முதல் காட்சி இது.

o மலர்மேனி பெருமாள்:

மறக்கமுடியாத தருணங்கள் ஏராளம் உள்ளன. அணியின் ஒரு பகுதியாக இருப்பதோடு கார்த்திக்கோடு பணிபுரிவதே மறக்கமுடியாத தருணமாகும். நான் மிகவும் மதிக்கும் ஒரு குழு. படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் மரியாதை அதிகம் கொடுத்த அணி. சிரிப்பும் மகிழ்ச்சியும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை.

ஒவ்வொரு உணவையும் ஒன்றாகச் சாப்பிட்டது எனக்கு மிகவும் பிடித்தது. ஒவ்வொரு உணர்ச்சிகரமான காட்சிகளுக்கும் பிறகு, நான் நன்றாக இருப்பதை கார்த்திக் மற்றும் சோமா உறுதி செய்வார்கள். எனக்கு அளிக்கப்பட்ட கவனிப்புக்கும் அன்பிற்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

பாஷினியுடன் அத்தியாயம் 18-இல் ஒரு காட்சி இருந்தது. திரைக்கதைப்படி (ஸ்கிரிப்ட்) அது  என்னில் தீர்க்கப்படாத சிக்கல்களைக் கொண்டு வந்தது. அந்த காட்சி முடிந்த பிறகும் நான் மிகவும் கடினமாக அழுதேன். பல ஆண்டுகளாக எனக்குள் இருந்ததை நான் வெளியில் கொட்டும் வரை பாஷினி என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டார்.

உண்மையில், வசனங்கள் என்னுள் இருந்த குரலை சித்தரித்தன. அது என் மறக்க முடியாத தருணம். நான் என் உள்ளத்துடன் சமாதானமாக இருக்கிறேன். எனக்கு மியா பாத்திரத்தை கொடுத்த கார்த்திக்கு நன்றி.

o யுவராஜ் கிருஷ்ணசாமி:

‘கல்யாணம் 2 காதல்’ தொடரில் பணிபுரிந்த மறக்கமுடியாத தருணங்களைப் பற்றி பகிர்ந்துக் கொள்ள பல உள்ளன. முதலாவதாக, இயக்குனர் கார்த்திக் ஷாமலனின் இயக்கத்தில் நடித்தது. அவரின் இயக்கத்தில் நடித்தது இதுவே முதல் முறையாகும். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது.

இடைவேளையின் போது சிறந்த தருணங்களையும் சிரிப்பையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஒரு வேடிக்கையான, மன அழுத்தமில்லாத, நேர்மறை மற்றும் ஒழுக்கமான பணிச்சூழலில் நாங்கள் பணியாற்றினோம். மகேந்திரன், பஷினி, மலர்மேனி பெருமாள் மற்றும் திறமையான நடிகர்கள் அனைவருடனும் திரை இடத்தைப் பகிர்வது எனக்கு மறக்கமுடியாத மற்றொரு தருணம்.

வளர்ந்து வரும் நடிகர்கள் கூட – ரவின் ராவ், விஜய், டிஷாலனி, ரமிதாஸ்ரி மற்றும் திரு ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்தனர். நாங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தைப் போல இருந்தோம், மறக்க முடியாத பல தருணங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

o பாஷினி சிவகுமார்:

படப்பிடிப்பில் எனது மறக்கமுடியாத தருணம் பேருந்து நிற்குமிடக் காட்சி. அங்கு நான் சௌமியாவின் கடந்த காலத்தைப் பற்றி விளக்க வேண்டியிருந்தது. ஒத்திகையின் போது கூட என் உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வரிகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்தக் காட்சி ஒரு சவாலாக இருந்தது. அத்தியாயம் 14-இன் மற்றொரு காட்சியில், உணர்ச்சியற்றவராக இருந்து அழுது, பின் அழுகையை கோபத்திற்கு மாற்ற வேண்டியிருந்தது. அந்த சவாலான 6 நிமிட காட்சி நிச்சயமாக மறக்க முடியாதது.

‘கல்யாணம் 2 காதல்’ தொடரை எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.