Home One Line P1 துணைப் பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் அம்னோ தலைவர் யார்?

துணைப் பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் அம்னோ தலைவர் யார்?

589
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தரப்பிலிருந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட ஏற்றுக்கொள்ளத்தக்கதாகக் கருதப்படும் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க, மொகிதின் யாசின் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பெர்சாத்து தலைவரான மொகிதின் யாசின், இந்த பதவிக்கு அம்னோ பிரதிநிதியை நியமிக்கத் தயாராக இருப்பதாகவும், வேட்பாளரைச் சமர்ப்பிக்க வேண்டியது அக்கட்சியின் பொறுப்பு என்றும் சின்சியூ டெய்லி கூறியுள்ளது.

எவ்வாறாயினும், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் சாஹிட் ஹமிட் இன்னும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், மொகிதின் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு வட்டாரம் கூறியதாகத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“டான்ஸ்ரீ (மொகிதின்) அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசானை ஏற்க முடியும்; தற்போது கட்சியில் எந்த பதவியும் இல்லாத அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அல்லது ஹிஷாமுடின் ஹுசேனை ஏற்க முடியும்.

“இப்போது மொகிதின் அம்னோவின் முன்மொழிவுக்காகக் காத்திருக்கிறார். ஆனால், அவர்கள் சாஹிட்டை விரும்பி வற்புறுத்தினால், மன்னிக்கவும்,” என்று அவர் கூறினார்.

மார்ச் மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், மொகிதின் முந்தைய தலைவர்களைப் போல துணை பிரதமரை நியமிக்கவில்லை.

அதற்கு பதிலாக நான்கு முதன்மை அமைச்சர்களை நியமித்தார். அவர்களில், இரண்டு பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர், இன்னொருவர் சரவாக் கட்சி கூட்டணியைச் சேர்ந்தவர்.