Home Featured நாடு “நஜிப்பைத் தோற்கடியுங்கள்” – பெக்கான் வாக்காளர்களுக்கு மகாதீர் அறைகூவல்!

“நஜிப்பைத் தோற்கடியுங்கள்” – பெக்கான் வாக்காளர்களுக்கு மகாதீர் அறைகூவல்!

808
0
SHARE
Ad

mahathir

கோலாலம்பூர் – தள்ளாத வயதிலும், தடுமாற்றமின்றி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிரான அரசியல் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், நஜிப்பை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்கும்படி பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களை காணொளி (வீடியோ) ஒன்றின் வழி கேட்டுக் கொண்டார்.

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி நஜிப் நீண்ட காலமாகப் போட்டியிட்டு வென்று வந்திருக்கும் தொகுதியாகும்.

#TamilSchoolmychoice

அவருக்கு முன்பாக அவருடைய தந்தையும் முன்னாள் பிரதமருமான துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததும் இதே பெக்கான் தொகுதிதான்.

பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியின் தலைவருமான மகாதீர் “நஜிப்பைத் தோற்கடிப்பதன் மூலம் நாட்டைக் காப்பாற்றுங்கள்” என்றும் பெக்கான் வாக்காளர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.

அவரது நடவடிக்கைகள் அவரது தந்தையின் நடவடிக்கைகளை விட மாறுபட்டிருக்கின்றன என்றும் மகாதீர் கூறியிருக்கின்றார். “என்னை அரசியலில் முன்னணிக்குக் கொண்டு வந்த துன் ரசாக்கின் மகன் என்ற காரணத்திற்காக நஜிப் பிரதமராவதற்கு நான் ஆதரவளித்தேன். ஆனால், இப்போது நஜிப் பண முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றார். அதோடு நாட்டுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கொள்கைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கின்றார். நாட்டிலேயே பெக்கான் மிக முக்கியமான தொகுதி எனக் கருதுகின்றேன். காரணம், அதன் நாடாளுமன்றப் பிரதிநிதி முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதோடு, நாட்டுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய திட்டங்களையும் கொண்டு வந்திருக்கின்றார்” என்றும் மகாதீர் அந்தக் காணொளியில் சாடியிருக்கின்றார்.

அந்தக் காணொளி பெர்சாத்து கட்சியின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.