Home Featured நாடு மலேசிய ஐஎஸ் தீவிரவாதி முகமட் வாண்டி கொல்லப்பட்டார்!

மலேசிய ஐஎஸ் தீவிரவாதி முகமட் வாண்டி கொல்லப்பட்டார்!

1293
0
SHARE
Ad

mohd wandy mohd jedi isis

கோலாலம்பூர் – மலேசியாவின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தீவிரவாதியும் சிரியாவில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவருமான முகமட் வாண்டி முகமட் ஜெடி கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சிரியாவின் ரக்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் என்பதை மலேசியக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தங்களுக்குக் கிடைத்த உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் இந்தத் தகவலை உறுதி செய்வதாக காவல் துறைத் தலைவர் (ஐஜிபி)  டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

வாண்டி மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.