Home Featured நாடு மஇகா-சங்கப் பதிவக வழக்கு – தொடுத்தவர்கள் 8-இல் இருந்து 3-ஆகக் குறைந்தனர்!

மஇகா-சங்கப் பதிவக வழக்கு – தொடுத்தவர்கள் 8-இல் இருந்து 3-ஆகக் குறைந்தனர்!

810
0
SHARE
Ad

mic-ros-combo-logo.without title jpgபுத்ரா ஜெயா – நேற்று கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மஇகா-சங்கப் பதிவகத்திற்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட எண்மர் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கைத் தொடுத்த ஐவர்  வழக்கைத் தொடர விருப்பமில்லை என அதிகாரபூர்வமாக விலகிக் கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனத் தொடர்ந்து வழக்கைத் தொடுத்திருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆகக் குறைந்துள்ளது.

இந்த வழக்கிலிருந்து 5 பேர் விலகியுள்ளனர் என ஏற்கனவே கடந்த 28 பிப்ரவரி 2017-இல் செல்லியல் ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

ஏ.கே.இராமலிங்கம், வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை, டத்தோ எம்.வி.இராஜூ  ஆகியோரே ஆரம்பத்தில் வழக்கு தொடுத்த எண்மராவர்.

இவர்களில் வி.கணேஷ்,  எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை ஆகிய ஐவர் வழக்கிலிருந்து நேற்றுடன் தங்களை விடுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எஞ்சிய மூவரான ஏ.கே.இராமலிங்கம், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்,டத்தோ எம்.வி.இராஜூ  ஆகியோர் மட்டுமே இனி இந்த வழக்கின் மேல்முறையீட்டைத் தொடர்வார்கள்.

மேலும், முந்தைய வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டு தற்போது வழக்கைத் தொடர்ந்து வரும் மூவரை வழக்கறிஞர் டத்தோ வி.மனோகரன் பிரதிநிதிக்கிறார்.

வழக்கின் விவரம்

மஇகாவும், சங்கப் பதிவகமும் கூட்டாக இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டனர் எனத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கூட்டரசு  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவதற்கு நேற்று திங்கட்கிழமை கூடிய கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் கூட்டரசு நீதிமன்றம் மேல்முறையீட்டுக்கான விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்கும்.