Home Featured உலகம் ‘எப்.பி.ஐ’ இயக்குநரை டிரம்ப் நீக்கினார்!

‘எப்.பி.ஐ’ இயக்குநரை டிரம்ப் நீக்கினார்!

884
0
SHARE
Ad

FBI-Comey-terminated

வாஷிங்டன் – அமெரிக்க அரசியலிலும், உலக அரங்கிலும் அதிரடி முடிவுகளை எடுத்து வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் மத்திய உளவுத் துறை அமைப்பான எப்.பி.ஐ (FBI-Federal Bureau of Investigations) இயக்குநர் ஜேம்ஸ் கோமி-யை (படம்) நீக்கினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் இணைய அஞ்சல்கள் மீதான விசாரணைகளை கோமி கையாண்ட விதத்தில் அதிருப்தி கொண்டு அவரை டிரம்ப் நீக்கியிருக்கின்றார்.