Home Featured இந்தியா ஒடிசாவில் புலிக்குட்டிக்கு பாகுபலி எனப் பெயரிடப்பட்டது!

ஒடிசாவில் புலிக்குட்டிக்கு பாகுபலி எனப் பெயரிடப்பட்டது!

1042
0
SHARE
Ad

tigercubபுவனேஸ்வர் – எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம், 1,000 கோடி வசூலாகியிருக்கும் நிலையில், அத்திரைப்படம் உலகமெங்கும் பலரையும் வியப்பிற்குள்ளாக்கியிருக்கிறது.

பாகுபலியின் புகழ், மிருகங்களைப் பராமரிக்கும் உயிரியல் பூங்காவையும் விட்டுவைக்கவில்லை.

ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்திருக்கும் புலிக்குட்டிக்கு ‘பாகுபலி’ என்று பெயர் சூட்டியிருக்கிறது உயிரியல் பூங்கா நிர்வாகம்.

#TamilSchoolmychoice

அந்த உயிரியல் பூங்காவிற்கு வந்த பெரும்பாலான பார்வையாளர்களின் பரிந்துரையின் படி, நேற்று புதன்கிழமை அப்புலிக்குட்டிக்கு ‘பாகுபலி’ என்று பெயர் சூட்டப்பட்டது.