Home Featured வணிகம் ‘மலிண்டோ ஏர்’ – ‘பாத்திக் ஏர்’ எனப் பெயர் மாற்றம்!

‘மலிண்டோ ஏர்’ – ‘பாத்திக் ஏர்’ எனப் பெயர் மாற்றம்!

996
0
SHARE
Ad

Malindo-Air

கோலாலம்பூர் – மலேசியாவின் மலிவு விலை விமானப் பயண நிறுவனமாக மலிண்டோ ஏர், தனது நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ‘பாத்திக் ஏர்’ (Batik Air) எனப் பெயர் மாற்றம் காண்கிறது.

இந்த ஆண்டின் மறுபாதியில் இந்தப் பெயர் மாற்றம் அமுலுக்கு வரும் என மலிண்டோ ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரன் ராமமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மலிண்டோ ஏர் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரரான இந்தோனிசியாவின் லயன் ஏர் (Lion Air) நிறுவனத்தின் சேவைகளோடு ஒருங்கிணைந்து தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் மலிண்டா ஏர் இந்தப் பெயர் மாற்றத்தோடு வேறு சில நிர்வாக மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் மேற்கொள்கின்றது.