பியோங்யாங்- வடகொரியா மீண்டும் ஏவுகணை ஒன்றை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை பாய்ச்சியிருக்கிறது. சுமார் 700 கிலோமீட்டர் பறந்து சென்ற இந்த ஏவுகணை ஜப்பான் கடல்பகுதியில் இரஷியாவுக்கு தென் பகுதியில் விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை 2000 கிலோமீட்டர் உயரத்துக்குப் பறந்து சென்றதாகக் கூறியிருக்கும் ஜப்பானிய அதிகாரிகள், இந்த ஏவுகணை புதிய மாதிரியான தயாரிப்பாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
வட கொரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள குசோங் என்ற பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை இரஷியாவுக்கு அருகில் விழுந்திருப்பதால், வட கொரியாவின் இந்த நடவடிக்கை, இரஷியாவுக்கும் மிரட்டலாக அமைந்திருக்கின்றது என பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.