Home Featured நாடு உயர் அதிகாரி உட்பட16 போலீசார் கைது: புக்கிட் அம்மானில் அதிரடிப் பதவி மாற்றங்கள்!

உயர் அதிகாரி உட்பட16 போலீசார் கைது: புக்கிட் அம்மானில் அதிரடிப் பதவி மாற்றங்கள்!

928
0
SHARE
Ad

bukit-amanகோலாலம்பூர் – போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, மூத்த அதிகாரி உட்பட புக்கிட் அம்மானைச் சேர்ந்த 16 காவல்துறையினர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், புக்கிட் அம்மானின் மிகப் பெரிய அளவிலான பதவி மாற்றங்கள் நிகழவிருப்பதாக தேசிய காவல்படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ நூர் ரஷித் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார்.

பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் 2012-ன் கீழ், துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஒருவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

போதை மருந்துத் தடுப்புப் பிரிவில் இருக்கும் அவர்கள், போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்குத் துணை போனதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

 

 

Comments