Home Featured வணிகம் 2 மில்லியன் சலுகை விலை டிக்கெட்டுகள் – மலிண்டோ ஏர் அறிவிப்பு!

2 மில்லியன் சலுகை விலை டிக்கெட்டுகள் – மலிண்டோ ஏர் அறிவிப்பு!

1144
0
SHARE
Ad
Malindo-Air
கோலாலம்பூர் – மலிவு மற்றும் வர்த்தக வகுப்புகளில் சுமார் 2 மில்லியன் சலுகை டிக்கெட்டுகளை அறிவித்திருக்கிறது மலிண்டோ ஏர் நிறுவனம்.

இந்தச் சலுகை விலையில் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கானப் பயணக் காலம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையில் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இன்று மே 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்தச் சலுகை விலை டிக்கெட்டுகளை வரும் மே 21-ம் தேதி வரையில் முன்பதிவு செய்யலாம்.மலேசியாவிலிருந்து உள்ளூர் பயணங்கள் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு 69 ரிங்கிட்டிலிருந்து 1,999 ரிங்கிட் வரையில், சலுகை விலை டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்படுவதாகவும் மலிண்டோ அறிவித்திருக்கின்றது.

இது குறித்த மேல் விவரங்களை malindoair.com என்ற அகப்பக்கத்தை வலம் வருவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.