Home Featured நாடு ஹாடி அவாங் மருத்துவமனையில் அனுமதி!

ஹாடி அவாங் மருத்துவமனையில் அனுமதி!

825
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் – பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஹாடியின் உடல்நிலை குறித்து தேவையான நேரத்தில் தகவல்கள் வெளியிடப்படும் என பாஸ் செயலாளர் டாக்டர் அகமட் சம்சுரி மொக்தார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஹாடியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தற்போதைக்கு அவரை மருத்துவமனையில் வந்து பார்ப்பதைத் தவிர்க்கும் படி ஹாடியின் குடும்பத்தினர் சார்பில் அகமட் சம்சுரி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“பாஸ் உறுப்பினர்கள் அனைவரும், ஆதரவாளர்களும் அவரின் உடல்நிலை தேறவும், சிகிச்சை நல்ல முறையில் நடைபெறவும் பிரார்த்தனை செய்து கொள்ளும் படி பாஸ் கேட்டுக்கொள்கிறது” என்று அகமட் சம்சுரி கூறினார்.