Home Featured நாடு “மஇகா தலைவர்கள் என்ன தான் செய்தார்கள்?”- இராமசாமி கேள்வி!

“மஇகா தலைவர்கள் என்ன தான் செய்தார்கள்?”- இராமசாமி கேள்வி!

795
0
SHARE
Ad

ramasamy-dap-deputy-chief-ministerகோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, வரும் ஜூன் 15-ம் தேதிக்குள், இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாமல் இருக்கும் 570,000 உறுப்பினர்களில், 90,000 பேரைப் பதிவு செய்த வாக்காளர்களாக மாற்ற இலக்கு கொண்டிருப்பதாக அண்மையில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா கூறியதை, பினாங்கு துணை முதல்வர் 2 பேராசிரியர் இராமசாமி விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து பேராசிரியர் இராமசாமி தனது பேஸ்புக்கில் கூறியிருக்கும் கருத்தில், “மஇகா தலைவர்கள் தங்களது அரசியல் தொடர்புகளில் தொடர்ந்து இருப்பதில் மட்டுமே அதிதீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். 500,000 உறுப்பினர்கள் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை என்பதைப் பார்க்கும் போது விசித்திரமாக இருக்கிறது. வரும் ஜூன் 15-ம் தேதிக்குள், 90,000 உறுப்பினர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்யப் போவதாக அதன் தலைவர் அண்மையில் அறிவித்திருக்கிறார். அப்படியானால், வாக்காளர்களாகப் பதிவு செய்யாமல் இத்தனை உறுப்பினர்கள் இருந்தும் இத்தனை ஆண்டுகளாக மஇகா தலைவர்கள் என்ன தான் செய்தார்கள்?” என்று ராமசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.