கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, 22 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்தவர். கடந்த 2003-ம் ஆண்டோடு பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் கூட, தற்போது 91 வயதிலும், அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு, பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், தான் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதன் இரகசியம் என்னவென்பதை மகாதீர் கூறியிருக்கிறார்.
“நான் எப்படி இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். அதற்குக் காரணம், 1. நான் புகைபிடிக்கமாட்டேன். 2. மது அருந்தமாட்டேன். 3. வயிறு முட்ட சாப்பிடமாட்டேன். 4. எப்போதும் புத்தகம் படிப்பேன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மகாதீர் கூறியிருக்கிறார்.
2015-ம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி, மலேசியர்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 74.8 வருடங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.