Home Featured தமிழ் நாடு சசிக்கலாவையும், பழனிச்சாமியையும் சந்தித்தது ஏன்? – கருணாஸ் விளக்கம்!

சசிக்கலாவையும், பழனிச்சாமியையும் சந்தித்தது ஏன்? – கருணாஸ் விளக்கம்!

1167
0
SHARE
Ad

karunasசென்னை – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில், இன்று செவ்வாய்க்கிழமை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கருணாஸ், வறட்சி காரணமாக ஏற்பட்டிருக்கும் கடுமையான குடிநீர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணும் படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாக கருணாஸ் தெரிவித்தார்.

இதனிடையே, பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவையும் சந்தித்த காரணம் குறித்து கருணாஸ் கூறுகையில், சசிகலாவை தோழமைக் கட்சியின் வேட்பாளர் என்ற முறையில் தான் சந்தித்தேன். ஏனென்றால், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்தப் பொறுப்பை எனக்கு வழங்குவதற்குக் காரணமாக இருந்தவர் அவர் என்ற விசுவாசத்தின் அடிப்படையில் தான் நான் அவரைச் சந்தித்தேன். அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். குறிப்பாக அடிமட்டத்தில் உள்ள தொண்டர்களிடமிருந்து வரக் கூடிய கடிதங்களையெல்லாம் படித்து அதற்கு பதில் எழுதிக் கொண்டிருப்பதாய் தெரிவித்தார்” என்று கருணாஸ் கூறினார்.

#TamilSchoolmychoice