Home Featured உலகம் இந்தோனிசிய இஸ்லாமியத் தலைவர் மீது ஆபாச வழக்கு!

இந்தோனிசிய இஸ்லாமியத் தலைவர் மீது ஆபாச வழக்கு!

812
0
SHARE
Ad

Indonesiaislamicleaderஜாகர்த்தா – ஜாகர்த்தாவைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆளுநருக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்திற்குத் தலைமை வகித்த இந்தோனிசிய இஸ்லாமியத் தலைவர் மீது ஆபாச வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது அவ்வழக்கை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக இன்று செவ்வாய்க்கிழமை இந்தோனிசிய காவல்துறைத் தெரிவித்திருக்கிறது.

ரிசீக் ஷிஹாப் என்ற அந்நபர் இஸ்லாமிய தற்காப்பு முன்னணி (Islamic Defenders Front) என்ற இயக்கத்தின் தலைவராவார்.

#TamilSchoolmychoice

பெண் ஒருவருக்கு ஆபாச செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.