Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுக்குச் சொந்தமாகிறது!

ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுக்குச் சொந்தமாகிறது!

990
0
SHARE
Ad

jayalalithaa759சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 68 சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

அதேவேளையில், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்றவர்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.

#TamilSchoolmychoice

மேலும் சட்டத்திற்குப் புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், ஜெயலலிதாவுக்கு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருக்கும் சொத்துக்களின் பட்டியலை எடுக்க அந்தந்த மாவட்ட வட்டாச்சியருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பட்டியலில் உள்ள 128 சொத்துக்களில் 68 சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அவற்றை அரசுடமையாக்கலாம் அல்லது அதனை விற்று அதில் வரும் பணத்தை அரசு கஜானாவிலும் சேர்த்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.