Home Featured நாடு அகிலன் தணிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் – தங்கப்பதக்கம் – மஇகா வழங்கியது!

அகிலன் தணிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் – தங்கப்பதக்கம் – மஇகா வழங்கியது!

1293
0
SHARE
Ad

akilan-mic -10k-30052017 (1)

கோலாலம்பூர் -மலேசியஇந்திய சமுதாயத்திற்கே தனது அபாரமான, துணிச்சலான போட்டித் திறனால் பெருமை சேர்த்திருக்கும் அகிலன் தணியைக் கௌரவிக்கும் வண்ணம் நேற்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் அகிலனுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகையும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மஇகா தலைவர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு அகிலனுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவரது வாழ்த்துக் கையெழுத்துகளையும் (ஆட்டோகிராப்) பெற்றனர்.

#TamilSchoolmychoice

agilan-thani-recognition-30052017

மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் (Mixed Martial Arts) எனப்படும் கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டியின் அனைத்துலக வெல்டர்வெயிட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டி கடந்த மே 26ஆம் திகதி சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் 15 முறை சாம்பியன் பட்டம் வென்ற பென் அஸ்க்ரென்னுடன் மோதி வரலாற்றில் இடம் பிடித்தார் 21 வயதே நிரம்பிய மலேசிய வீரர் அகிலன் தணி.

அதனைத் தொடர்ந்து இவ்விளையாட்டில் அவரை ஊக்குவித்து அங்கீகரிக்கும் வண்ணம் நேற்று செவ்வாய்க்கிழமை ம.இ.கா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையிலும் ம.இ.கா இளைஞர் பிரிவு ஏற்பாட்டிலும் அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இப்பாராட்டு விழாவில் ம.இ.கா சார்பில் அகிலனுக்கு தங்கப்பதக்கமும் 10,000 ரிங்கிட் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

akilan-mic -10k-30052017 (3)

கோலாலம்பூர், செந்தூலைச் சேர்ந்த அகிலன் த/பெ தணிகாசலம் எனும் இந்த இளைஞர் முதல் முறையாக சிங்கப்பூரில் நடைபெற்ற வெல்டர் வெயிட் ஓன் சாம்பியன் போட்டிக்கு முன்னேறி நமக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இப்போட்டியில் 21 வயதான அகிலன் தணி, 32 வயதான அமெரிக்காவின் பென் அஸ்க்ரென்னுடன் மோதினார். 15 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பென் அஸ்க்ரென்னுக்கு மிகப்பெரிய சவாலாக அகிலன் தாணி விளங்கினார்.

10 நாட்களுக்கு முன்னதாக “அகிலன் தணி” என்ற ஒரு தனி மனிதன் யார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், இன்று அவர் உலகளவில் புகழ்பெற்ற வீரராவார். வாழ்க்கையில் சாதிக்க சுற்றுச்சுழல் வாழ்க்கை ஒரு தடையல்ல என்பதற்கு அகிலன் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.

akilan-mic -10k-30052017 (5)

இதுவரை அகிலன் 7 வெற்றிகளை நிலைநாட்டியுள்ளார். இதில் மூன்று நாக்-அவுட் வெற்றிகளாக அமைந்துள்ளது. ஆனால் பென் அஸ்க்ரென் 15 முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். அகிலனை வீழ்த்தி 16ஆவது முறையாக வெற்றியைக் கைப்பற்றியுள்ளார். கலப்புத் தற்காப்புக் கலைப் போட்டியில் அகிலன் தாணியைக் காட்டிலும் அனுபவங்களும், ஆற்றலையும் கொண்ட ஒருவரிடம்தான் அகிலன் தோல்வி கண்டுள்ளார்.

அகிலனுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கி உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் “இப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் வீரருடன் களமிறங்கி அவருக்குச் சவாலான போட்டியைக் கொடுத்ததையே அகிலன் தாணியின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். செந்தூல் பட்டணத்தில் இருந்து அனைத்துலக சாம்பியன் போட்டியில் களமிறங்கி பென் அஸ்க்ரென்னுக்கே சவால் கொடுத்து அகிலன் தாணி வரலாற்றில் இடம்பிடித்தது மட்டுமின்றி நம் சமுதாயத்திற்குப் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அகிலனுக்கு இது நிச்சயம் புதிய அனுபவம் மட்டுமின்றி சிறந்த அனுபவமாகவும் இருக்கும். எதிர்காலத்தில் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லக்கூடிய வாய்ப்பு அகிலனுக்கு வெகுதூரமில்லை. நிச்சயம் அவர் வெல்வார் என்ற நம்பிக்கை ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் இருக்கின்றது. அவ்வகையில், அகிலனின் முயற்சிக்கு நாம் அனைவரும் தொடர்ந்து ஆதரவினையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும்” என்று கூறினார்.

“ம.இ.காவைப் பொறுத்தவரையில் இந்திய இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்துவதோடு சிறந்த வெற்றியைப் பதிவு செய்யவும் தொடர் ஆதரவினை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் அகிலன் தாணிக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழியாக பெற்றுத்தரக்கூடிய அனைத்து முயற்சிகளையும் ம.இ.கா மேற்கொள்ளும். இன்று பல இளைஞர்களுக்கு ஊக்குவிப்பாகவும் சிறந்த உதாரணமாகவும் இருக்கும் அகிலன் தாணிக்கு இவ்வேளையில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு உலகளவில் அவர் தொடர்ந்து சாதனை படைக்க இறைவனை வேண்டுகிறேன்” என சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

படங்கள்: நன்றி – drsubra.com