Home Featured நாடு ‘தி ஸ்டார்’ மீது தேசத் துரோக விசாரணை – காலிட் தகவல்!

‘தி ஸ்டார்’ மீது தேசத் துரோக விசாரணை – காலிட் தகவல்!

915
0
SHARE
Ad

thestarfront pageகோலாலம்பூர் – கடந்த மே 27-ம் தேதி, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் புகைப்படத்தின் மேல் செய்தியில், மலேசியத் தீவிரவாதிகள் பற்றிய செய்தியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் ‘தி ஸ்டார்’ பத்திரிகை மீது தேசத் துரோக விசாரணை நடைபெறவிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார்.

அப்பத்திரிகைக்கு எதிராக பலரும் புகார் அளித்ததையடுத்து, இந்த விசாரணை துவங்கப்பட்டிருப்பதாகவும் காலிட் குறிப்பிட்டிருக்கிறார்.

“அப்படி ஒரு முதல் பக்க வடிவமைப்பிற்குக் காரணமானவர்களை அழைத்து வாக்குமூலம் பெறுவோம்” என்று காலிட் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice