Home வணிகம்/தொழில் நுட்பம் ‘ஸ்டார்’ ஒன்லைன் மலேசியாவின் முதல்நிலை இணையத் தளம்!

‘ஸ்டார்’ ஒன்லைன் மலேசியாவின் முதல்நிலை இணையத் தளம்!

1193
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் இயங்கும் இணைய ஊடகங்களில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டு முதல் நிலையைப் பெற்று ஸ்டார் ஒன்லைன் ஊடகம் தொடர்ந்து சாதனை புரிந்துள்ளது.

அதே வேளையில் அனைத்து இணையத் தளங்களிலும் அதிகமானப் பார்வையாளர்களைங் கொண்ட தளங்களின் வரிசையில் இரண்டாவது நிலையை ஸ்டார் எட்டிப் பிடித்தது. முதல் நிலையை மேபேங்க் வங்கியின் இணையத் தளம் அடைந்திருக்கிறது.

ஸ்டார் 3.7 மில்லியன் தனி பார்வையாளர்களை செப்டம்பர் மாதத்தில் மட்டும் கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

3.1 மில்லியன் பார்வையாளர்களோடு 5-வது நிலையில் மிகப் பிரபலமான இணைய ஊடகமாக மலேசியாகினி திகழ்கிறது. அதனை அடுத்து 6-வது நிலையில் அஸ்ட்ரோ அவானி 2.8 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட ஊடகமாகத்  திகழ்கிறது.

மலாய் இணைய ஊடகங்களும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டு சாதனை புரிந்துள்ளன. அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட இணைய ஊடகங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தை ஹரியான் மெட்ரோ (3.5 மில்லியன்) பிடித்தது. மூன்றாவது நிலையை பெரித்தா ஹரியான் (3.4 மில்லியன்) பிடிக்க மற்றொரு பிரபல மலாய் ஊடகமான சினார் ஹரியான் (3.3 மில்லியன்) 4-வது இடத்தைப் பிடித்தது.

இணைய ஊடகங்கள் இந்த ஆண்டு முதல் புதிய மறுமலர்ச்சிப் பாதையில் பயணம் செல்லத் தொடங்கியிருக்கின்றன. மே 9-இல் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தல் இணைய ஊடகங்களின் எழுச்சிக்கு வித்திட்டதோடு, அந்தத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்ததும்  இணைய ஊடகங்களின் பங்களிப்புதான் என்றால் அது மிகையாகாது.

மத்தியில் ஆட்சி அமைத்த நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து கட்டுப்பாடுகள் அற்ற சூழ்நிலையையும், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் நிலைநாட்டியதைத் தொடர்ந்து இணைய ஊடகங்கள் தொடர்ந்து அதிக அளவிலான வாசகர்களை ஈர்த்து வருகின்றன.