Home Featured கலையுலகம் இருமுகன்: விக்ரம் தனது மகனுடன்!

இருமுகன்: விக்ரம் தனது மகனுடன்!

950
0
SHARE
Ad

Vikram and Dhruvசென்னை – தென்னிந்திய நடிகர்களில் 50 வயதைக் கடந்தும் இன்னும் இளமையோடு இருக்கும் நடிகர் சீயான் விக்ரம். தேவைக்கேற்ப உடலை ஏற்றி இறக்கி எப்போதும் கட்டுமஸ்தாகக் காட்டுவதில் கில்லாடி. விக்ரமிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த ஆண்டு தான் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், விக்ரமின் மகன் துருவ், தற்போது திரையுலகில் நுழையவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட துருவ், சினிமாவில் நடிகராக அறிமுகமாவாரா? அல்லது தொழில்நுட்பத்துறையில் நுழைவாரா? என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

சில தினங்களுக்கு முன்பு தந்தையும் மகனும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.