Home Featured தமிழ் நாடு சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!

சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!

956
0
SHARE
Ad

chennai silksசென்னை – சென்னை திநகரில் அமைந்திருக்கும் பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை அதிகாலை தீ பற்றி எரியத் தொடங்கியது.

தீயணைப்பு வீரர்கள் நேற்று முழுவதும் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கட்டிடத்தின் ஒரு பகுதி பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

#TamilSchoolmychoice

தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததால், இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனிடையே, கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்துவிடும் என்று நம்பப்படுவதால், அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, அபாயகரமான பகுதி என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.