Home வணிகம்/தொழில் நுட்பம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசு உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசு உயர்வு

989
0
SHARE
Ad

புது டெல்லி, ஜன. 17 – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததை தொடர்ந்து பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 35 காசு இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுவதாக பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் அமலில் உள்ள விற்பனை வரி அல்லது வாட் வரியைபொருத்து இந்த விலை உயர்வில் சிறிது வேறுபாடு இருக்கும். டெல்லியில் லிட்டருக்கு 35 காசு உயர்த்தப்பட்டதை அடுத்து பெட்ரோல் விலை அங்கு ரூ. 67.56 ஆக இருக்கும். சென்னையில் இதுவரை லிட்டர் ரூ. 70.57 க்கு விற்கப்பட்டு வரும் பெட்ரோல் தோராயமாக இனி ரூ. 70.92 க்கு விற்கப்படும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் விலை கட்டுப்பாடு நவம்பரில் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு முதல் தடவையாக இப்போது தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.