Home Featured நாடு பள்ளிவாசலில் நிகழ்ச்சி நடத்த மொகிதினுக்குத் தடை

பள்ளிவாசலில் நிகழ்ச்சி நடத்த மொகிதினுக்குத் தடை

843
0
SHARE
Ad

muhyiddin-yassin1

தங்காக் – ஜோகூர் மாநிலத்திலுள்ள தங்காக் நகரில் உள்ள ஒரு பள்ளி வாசலில் நிகழ்ச்சி நடத்த முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் பள்ளிவாசல் மொகிதின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் பாகோ நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.

#TamilSchoolmychoice

பெக்கான் குண்டாங் உலு என்ற இடத்தில் உள்ள மஸ்ஜிட் அன்-நூர் எனப்படும் பள்ளிவாசலில் எதிர்வரும் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் மொகிதின் யாசின் தனது தொகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கவிருந்தார்.

மொகிதின் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சியின் தலைவருமாவார்.

தங்காக் வட்டார இஸ்லாமியப் பிரிவுத் தலைவர் (காதி) இந்தக் கடிதத்தை மொகிதின் யாசினின் சேவை மையத்துக்கு அனுப்பியிருக்கிறார்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட அந்த நிகழ்ச்சி பள்ளிவாசலுக்குள் நடத்தப்படும் அரசியல் நிகழ்ச்சி அல்ல என்றும் மொகிதின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து உதவிப் பொருட்கள் வழங்கும் அந்த நிகழ்ச்சி, அந்தப் பள்ளி வாசலுக்கு அருகிலுள்ள ஆதரவாளர் ஒருவரின் இல்லத்தில் நடத்தப்படும் என்றும் மொகிதின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா தனது தொகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் அரசியல் உரை ஆற்றியதற்காக சிலாங்கூர் சுல்தான் அதிருப்தியும், ஆத்திரமும் கொண்டார் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கக் கடிதம் அனுப்பவிருப்பதாக சிவராசா தெரிவித்திருக்கின்றார்.