Home Featured இந்தியா ஹரியானாவில் 5.0 புள்ளி நிலநடுக்க அதிர்வுகள்!

ஹரியானாவில் 5.0 புள்ளி நிலநடுக்க அதிர்வுகள்!

1055
0
SHARE
Ad

earthquakeபுதுடில்லி – ஹரியானா மாநிலத்தில் 5.0 புள்ளிகள் ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுடில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்திய நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.25 மணியளவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், ஹரியானாவின் ரோத்தாக் பகுதியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் முதலில் தோன்றியதாகவும் இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

இதுவரையில் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.