Home Featured தமிழ் நாடு கோவையில் காட்டுயானை அட்டூழியம்: 4 பேர் பலி!

கோவையில் காட்டுயானை அட்டூழியம்: 4 பேர் பலி!

1189
0
SHARE
Ad

AngryElephantகோவை – கோயம்பத்தூர் அருகேயுள்ள போத்தனூர் என்ற பகுதியில் மதம்பிடித்த காட்டுயானை ஒன்று ஊருக்குள் புகுந்து இதுவரை 4 பேரைக் கொன்றிருக்கிறது.

போத்தனூர் கணேசபுரம் என்ற இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் வெளியே படுத்திருந்த வயதான மூதாட்டி ஒருவரும், சிறுமி ஒருவரும் காட்டுயானை தாக்கியதில் பலியாகினர். இதற்கு முன்னதாக அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் அந்த யானை கொன்றிருக்கிறது.

இந்நிலையில், யானையைப் பிடிக்க வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்திருக்கின்றனர். யானை ஊருக்கள் சுற்றுவதால் போத்தனூர், மதுக்கரை, சுந்தராபுரம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.