Home One Line P1 சபா: நச்சு காரணமாக 10 ஆண்டுகளில் 50 முதல் 60 யானைகள் இறந்துள்ளன

சபா: நச்சு காரணமாக 10 ஆண்டுகளில் 50 முதல் 60 யானைகள் இறந்துள்ளன

476
0
SHARE
Ad

கலாபக்கான்: சபாவில் கடந்த 10 ஆண்டுகளில் 50 முதல் 60 யானைகள் இறந்துள்ளதாக சபா வனவிலங்குத் துறை துணை இயக்குநர் டாக்டர் சென் நாதன் தெரிவித்தார்.

“மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு யானையும் தாவரங்கள், சுற்றுச்சூழல் அல்லது தோட்டப் பகுதியிலிருந்து நச்சுக்கு ஆளாகின்றன.” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

டாக்டர் சென் நாதன் கருத்துப்படி, சபாவில் யானை நச்சு பற்றிய ஆராய்ச்சி மற்றும் விசாரணையில் தேசிய நச்சு மையத்துடன், வனத்துறை துறை ஒத்துழைத்து வருவதாகக்  கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய நச்சு மையத்துடன் ஒத்துழைப்பு மார்ச் மாதத்தில் தொடங்கியது, ஆனால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது தாமதமானது என்று அவர் குறிப்பிட்டார்.

“ஆனால், யானை நச்சு காரணத்தை தீர்மானிக்க நாங்கள் பின்னர் திட்டத்தைத் தொடருவோம்.” என்று அவர் கூறினார்.

டாக்டர் சென் நாதன் கூறுகையில், பிடிபட்டு காட்டுக்குள் விடுவிக்கப்பட்ட யானைகளும் குறைந்த ஆபத்துள்ள நச்சிற்குற்கு ஆளாகின்றன.

இருப்பினும், பெரும்பாலான பண்ணைகள், விலங்குகளை பாதுகாக்கக்கூடிய ஒரு விவசாய முறையை கடைப்பிடித்துள்ளதால், இப்பகுதியில் யானை நச்சு பிரச்சனை கவலைப்படும் வகையில் இல்லை.

“நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புவது, அவர்கள் நோக்கத்துடன் நச்சு வைத்திருந்தார்களா இல்லையா என்பதுதான்.” என்று அவர் கூறினார்.

மலேசிய பாமாயில் மன்றத்தின் நிதி மூலம் மாநிலத்தில் யானைகளின் எண்ணிக்கை குறித்த முழுமையான தரவைப் பெற இந்தத் துறை ஆகஸ்ட் மாதம் முதல் கள ஆய்வு மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

தரவுகளின்படி, 12 ஆண்டுகளுக்கு முன்பு சபாவில் யானைகளின் எண்ணிக்கை 2000- ஆகவும், மிகப்பெரிய மந்தை மவுண்ட் ராரா வன ரிசர்வ் 600 வரையிலும், தபின் வன ரிசர்வ் (சுமார் 500) மற்றும் கினாபத்தாங்கானில் (300) காணப்பட்டன.

“மனித-யானை மோதல் குறிப்பாக வாழ்விடப் பகுதியில் அதிகரித்து வருவதால் ஒரு புதிய தரவை உருவாக்க வேண்டிய நேரம் இது. அனைத்து தோட்ட உரிமையாளர்களையும் நாங்கள் ஒரு கணக்கெடுப்பு செய்வதற்கும் தரவுகளை முழுமையாய் பெறுவதற்கும் சந்திப்போம்.” என்று அவர் மேலும் கூறினார்.