Home Featured தமிழ் நாடு கலைஞரின் வைரவிழா – அகில இந்தியத் தலைவர்கள் சென்னையில் கூடினர்!

கலைஞரின் வைரவிழா – அகில இந்தியத் தலைவர்கள் சென்னையில் கூடினர்!

890
0
SHARE
Ad

anbalagan-stalin-rahul-kalaignar diamond

சென்னை – (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) இங்குள்ள இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் (இந்திய நேரப்படி) மாலை 5.00 மணி அளவில் கலைஞர் கருணாநிதியின் சட்டமன்றப் பிரவேசத்தின் வைரவிழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் என இரட்டைக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கின.

இந்த விழாவில் கலந்து கொள்ள பல இந்தியக் கட்சித் தலைவர்கள் வருகை தந்திருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.இராஜா, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒமார் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்துகிறார்.

#TamilSchoolmychoice

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வரவேற்புரையோடு தொடங்கிய நிகழ்ச்சியில் வருகை தந்திருக்கும் அகில இந்தியத் தலைவர்கள் ஒவ்வொருவராக உரையாற்றி வருகின்றனர்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.