Home Featured தமிழ் நாடு சசிகலா-தினகரனுடன் தொடர்பு இல்லை – ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு!

சசிகலா-தினகரனுடன் தொடர்பு இல்லை – ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு!

993
0
SHARE
Ad

jayakumar-admk-minister

சென்னை – (மலேசிய நேரம் மாலை 7.00 மணி நிலவரம்) இன்று திங்கட்கிழமை மாலை தமிழக அரசியலை மீண்டும் பரபரப்பு மேகங்கள் சூழத் தொடங்கின. அது தொடர்பான இறுதி நிலவரத் தகவல்கள்:

  • அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கச் சென்றனர்.
  • அதன் பின்னர் இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயகுமார் ஏற்கனவே, அதிமுக அரசு சார்பிலான தமிழக அமைச்சர்கள் எடுத்த ஒருமித்த முடிவின்படி சசிகலா-தினகரன் குடும்பத்தினரை அதிமுக அரசு மற்றும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டு அம்மாவின் ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவோம் என்று அறிவித்தார்.
  • அமைச்சர்கள், கட்சிக்காரர்கள் யாரும் தினகரனுடன் சந்திப்பு நடத்த மாட்டார்கள், தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயகுமார் அறிவித்தார்.
  • இதற்கிடையில் தற்போது பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் சந்திப்பு நடத்திக் கொண்டிருக்கும் தினகரன் அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தனது தரப்பு நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.