Home Featured கலையுலகம் இறந்தும் உடல் உறுப்புகள் தானத்தால் உயிர் வாழப்போகும் சதீஸ் ராவ்!

இறந்தும் உடல் உறுப்புகள் தானத்தால் உயிர் வாழப்போகும் சதீஸ் ராவ்!

891
0
SHARE
Ad

Sathisrao1ஷா ஆலம் – மறைந்த மலேசிய நடிகர் சதீஸ் ராவின் இறுதிச்சடங்குகள் இன்று திங்கட்கிழமை அவரது தாயார் வீடான ஷா ஆலம், தாமான் ஸ்ரீமூடாவில் நடைபெற்றது.

சதீஸ் ராவின் குடும்பத்தினரும், உற்றார் உறவினர்களும், மலேசியக் கலைஞர்களும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

SathisRaoஇதனிடையே, சதீஸ் ராவ், உடல் உறுப்புகள் தானத்திற்கு எழுதிக் கொடுத்திருந்ததால், அதன் படி, அவரது கண்கள், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை தானம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

இறந்த பின்னும் கூட, தனது உடல் உறுப்புகள் தானத்தால், பிறரின் வாழ்வில் ஒளியேற்றவிருக்கும் திறமைவாய்ந்த மலேசியக் கலைஞர் சதீஸ் ராவ், தான் ஒரு சிறந்த மனிதர் என்பதை இதன் மூலம் நிரூபித்து, தன்னைச் சார்ந்தவர்களுக்கும், சக கலைஞர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குவாங் அருகே ஒரு பங்களாவிற்குச் சென்ற சதீஸ் ராவ், அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.