Home Featured தமிழ் நாடு என்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: டிடிவி தினகரன்

என்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: டிடிவி தினகரன்

1176
0
SHARE
Ad

TTV Thinakaranபெங்களூரு – ‘என்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை’ என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

பெங்களூர் சிறையில் சசிகலாவைச் சந்திக்கச் சென்ற டிடிவி தினகரன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அமைச்சர்கள் ஏதோ பயத்தில் இருக்கிறார்கள். அதனால் தான் என்னைக் கட்சியிலிருந்து விலகச் சொன்னார்கள். நானும் அவர்களுக்குப் பிரச்சினை வரக்கூடாது என்று விலகுவதாக அறிவித்தேன். இப்போது எனது சித்தியைப் பார்க்கச் செல்கிறேன். மேலும் அதிமுக பொதுச்செயலாளரான அவரைச் சந்தித்து ஆலோசனை பெறவிருக்கிறேன். அவரது அறிவுரையை ஏற்றுச் செயல்படுவேன். மற்றபடி என்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை” என்று தினகரன் கூறினார்.

மேலும், தன் மீதான லஞ்ச வழக்கு குறித்துக் கூறுகையில், மிக விரைவில் அவ்வழக்கில் இருந்து விடுபட்டு தன்னை நிரூபிப்பேன் என்றும் தினகரன் தெரிவித்தார்.