Home Featured தமிழ் நாடு “வைகோ விவகாரம் – நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்” – எடப்பாடி உறுதி

“வைகோ விவகாரம் – நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்” – எடப்பாடி உறுதி

1122
0
SHARE
Ad

vaiko

சென்னை – வைகோ மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், தமிழகத்தில் கண்டனக் குரல்கள் எழுப்பி வருகின்றனர்.

வைகோ விவகாரம் குறித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கண்டனக் குரல் எழுப்புவர் என்றும் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வைகோ மலேசியாவுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதற்காக தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ஏற்கனவே, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் வைகோவுக்கு மலேசியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.