Home கலை உலகம் எல்லா வேடத்திலும் நடிப்பேன் -லட்சுமிராய்

எல்லா வேடத்திலும் நடிப்பேன் -லட்சுமிராய்

785
0
SHARE
Ad

lashmi-raiசென்னை, மார்ச்.24- கதாநாயகி  வேடத்துக்காக காத்திருக்க மாட்டேன் என்றார் லட்சுமிராய்.

கதாநாயகி  வேடம் வந்தால் நடிப்பேன் என்று சில நடிகைகள் பிடிவாதமாக இருப்பதுண்டு. இதற்காக காத்திருந்து பட வாய்ப்புகளை இழந்த நடிகைகள் பலர்.

ஆனால் லட்சுமிராய் இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார். அவர் கூறும்போது, ‘ஒரு நடிகையாக விதவிதமான வேடங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். படம் வெற்றி அடைகிறதோ தோல்வி அடைகிறதோ அது இரண்டாவதுபட்சம்தான்.

#TamilSchoolmychoice

ஒரு காலகட்டத்துக்கு பிறகு எனது நடிப்புலக வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை செய்த திருப்தி இருக்க வேண்டும். கதாநாயகிகளைப்  பொறுத்தவரை  கதாநாயகர்களைவிட குறுகிய காலம் மட்டுமே நடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

நான் நடிக்கும் படங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெற்றால்கூட அடுத்த 2 அல்லது 3 ஆண்டுக்கு தொடர்ந்து நடிக்க முடியும். எனவேதான் என்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்கிறேன். நல்ல படத்தில் ஒரு அங்கமாக இருந்தால்கூட போதும் என்றார்.