Home இந்தியா சென்னையில் தி.மு.க. செயற்குழு நாளை கூடுகிறது

சென்னையில் தி.மு.க. செயற்குழு நாளை கூடுகிறது

828
0
SHARE
Ad
karunanithi

சென்னை, மார்ச். 24  சென்னையில் தி.மு.க தலைமை செயற்குழு அவசர கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளர் க.அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 7 முதல் 10 பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

#TamilSchoolmychoice

இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250 பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வின் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப்படுத்தியதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் மத்திய மந்திரி சபையில் இருந்தும் தி.மு.க விலகி உள்ள சூழ்நிலையில் தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.