Home Featured தமிழ் நாடு கர்ணன் கொல்கத்தா அழைத்துச் செல்லப்படுகிறார்!

கர்ணன் கொல்கத்தா அழைத்துச் செல்லப்படுகிறார்!

1327
0
SHARE
Ad

சென்னை – நேற்று செவ்வாய்க்கிழமை கோவையில் கைது செய்யப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன், சென்னையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை கொல்கத்தா அழைத்துச் செல்லப்படவிருக்கிறார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட கர்ணன், கைதாவதில் இருந்து தப்பிக்க, கோவை, பொள்ளாச்சி இடையில் இருக்கும் கிராமம் ஒன்றில், ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த புதிய வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

அங்கிருந்த படி இரகசியமாக உறவினர்களுடன் போனில் பேசி வந்த கர்ணனை, மேற்குவங்க காவல்துறையினர் நேற்று கோவை காவல்துறையினரின் உதவியோடு கைது செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன், உச்சநீதிமன்றத்தால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல் குறித்த புகார் ஒன்றை பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்காமல் ஊழல் புகார் சுமத்திய கர்ணனின் நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது.

இவ்வழக்கில், கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்ததோடு, அவரைக் கைது செய்ய மேற்குவங்க காவல்துறைக்கும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.