Home Featured வணிகம் சென்னைக்கும் தினசரி சிறகு விரிக்கிறது மலிண்டோ ஏர்

சென்னைக்கும் தினசரி சிறகு விரிக்கிறது மலிண்டோ ஏர்

1556
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜூலை 25-ஆம் தேதி முதல் கோலாலம்பூருக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை மலிண்டோ ஏர் விமான நிறுவனம் தொடங்கவிருக்கிறது.

இது மலேசிய இந்தியர்களுக்கும், தமிழக மக்களும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும். காரணம், அண்மையக் காலங்களில் ஏர் ஆசியா விமான நிறுவனம் மட்டுமே சென்னைக்கும், கோலாலம்பூருக்கும் இடையில் மலிவு விலை விமான சேவையில் ஈடுபட்டு வந்தது.

#TamilSchoolmychoice

பெயர்தான் மலிவு விலை விமான சேவையே தவிர, நெருக்கடியான நேரங்களில், ஏர் ஆசியா விமானப் பயணத்திற்கான கட்டணம் ஒருவழிப் பயணத்திற்கே 1,500 ரிங்கிட் வரை சில சமயங்களில் உயர்ந்ததாகப் பயணிகள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மலிண்டோ ஏர் சென்னைக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான தினசரி விமான சேவைகளைத் தொடக்குவதால், விமானப் பயணத்துக்கான கட்டணங்கள் கணிசமான அளவில் குறையும் என்றும், பயணிகளுக்கு ஒரு மாற்று வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தினசரி காலை 6.25 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து புறப்படும் மலிண்டோ ஏர் விமானம் காலை 7.55 மணிக்கு சென்னையை அடையும்.

பின்னர், காலை 8.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் மலிண்டோ ஏர், பிற்பகல் 3.25 மணிக்கு கோலாலம்பூரை வந்தடையும்.