புதுடெல்லி – வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருக்கும் இந்திய அதிபர் தேர்தலுக்கு மொத்தம் 24 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
பாஜக சார்பில் ஏற்கனவே பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காங்கிரஸ் சார்பில் யாரை நிறுத்துவது என ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, நேற்று புதன்கிழமை நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன், பீஹார் மாநிலம் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட மொத்தம் 24 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
அவர்களில் 8 பேரின் ஆவணங்கள் முறையாக இல்லாததால் அவர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.