Home இந்தியா துணை அதிபராக வெங்கய்யா பதவியேற்றார்!

துணை அதிபராக வெங்கய்யா பதவியேற்றார்!

1213
0
SHARE
Ad

Vengaiyanaiduபுதுடெல்லி – இந்தியாவின் 13-வது துணை அதிபராக வெங்கய்யா நாயுடு இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, நடைபெற்ற துணை அதிபருக்கான தேர்தலில் 98.21% வாக்குகள் பதிவாகின. அதில், பாஜக சார்பில் போட்டியிட்ட வெங்கய்யா நாயுடு 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.